உலகம்

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: 36 பேர் பலி

மத்திய சீனாவில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர்.

DIN

மத்திய சீனாவில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரின் வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் தொழிற்சாலையில் திங்கள்கிழமை மாலை 4:22 மணிக்கு (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டது.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். சிறிய காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை சீராக இருப்பதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்புடைய சந்தேகப்படும் நபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT