உலகம்

அதிகரிக்கும் கரோனா பரவல்: ஷாங்காயில் மீண்டும் பொதுமுடக்கம்?

DIN

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் அதிகரித்து கரோனா தொற்று பரவலின் காரணமாக மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த சில நாள்களாக ஷாங்காய் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மூன்று பேருக்கு புதிதாக தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை ஷாங்காய் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நகருக்குள் வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருமுறை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT