முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் மசூதி முன்பாக முன்னாள் நீதிபதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் வெள்ளிக்கிழமை பலுசிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அவர் மீது திடீரென பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பல்வேறு முக்கிய வழக்குகளில் நீதியின் பக்கம் நின்று தைரியமாக தீர்ப்பளித்தவர் என பெயர் பெற்றுள்ளார். அவரது மறைவு அந்த மாகாண மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ, நீதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →