உலகம்

ஸ்டார்பக்ஸ் தலைமைச் செயலராக லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வு

DIN

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலாளராக லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகளவில் பிரபலமான காபி அருந்தக நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கார்பரேஷனில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மண் நரசிம்மன்(55) தலைமைச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லக்ஷ்மண் டுயூரக்ஸ் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிவர்.

ஸ்டார்பக்ஸ் காபி

தற்போது, ஸ்டார்பக்ஸ் சிறிய அளவிலான சரிவைச் சந்தித்து வருவதால் இழந்த சந்தை மதிப்பை மீண்டும் சரிப்படுத்த லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்டார்பக்ஸில் இணையும் லக்ஷ்மண் 2023, ஏப்ரலில்  புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொள்வார் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக நாதெள்ள சத்யா, அடோப் சிஇஓவாக சாந்தனு நாராயண், கூகுள் சிஇஓவாக சுந்தர் பிச்சை, ட்விட்டர் தலைவர் பராக் அகர்வால் ஆகியோர் அமெரிக்க நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள இந்தியர்கள். தற்போது, அப்பட்டியலில் லக்ஷ்மண் நரசிம்மனும் இணைந்துள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள் டாடா குழுமத்திடம் இருப்பது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT