இலங்கை அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!
கோத்தபய ராஜபட்ச தப்பியோடியதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்கார்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
கோத்தபய ராஜபட்ச தப்பியோடியதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்கார்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
இதையடுத்து கோத்தபய ராஜபட்ச, மாளிகையில் இருந்து தப்பியோடி, பாரமுல்லை பகுதியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பியோட்டம்!