உலகம்

கடலில் கலக்கும் ஃபுகுஷிமா கதிரியக்க நீர்: கடல் உணவு விற்பனை பாதிக்குமா?

ANI


இவாகி: ஜப்பானில் ஃபுகுஷிமா கதிரியக்க நீர் கடலில் கலக்கும் நிலையில்,  தெற்கு துறைமுகப் பகுதியில், மீன்களின் ஏலம் ஏற்றம் - இறக்கத்துடன் இருந்தது. 

மக்கள் கடல் உணவுகளை வாங்குவதற்கு அஞ்சுவார்களோ என்பதால், மீன்களை ஏலம் எடுப்பவர்களுக்கு ஒரு நிலையற்ற விற்பனை வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது. 

ஃபுகுஷிமாவில் அதிகம் பேரால் விரும்பப்படும் ஜோபன்- மோனோ வகை மீன் 10 சதவீதம் விலைக் குறைவுடன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. சில சின்ன் வகை மீன்களின் விலை சற்று ஏற்றத்துடன் ஏலம் எடுக்கப்பட்டாலும், பெரும்பாலான மீன்கள் குறைவான விலையிலேயே ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக மீன் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் வரை மீன் விற்பனையை கண்காணிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை 24ஆம் தேதி முதல் கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு செய்து வருகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன.

அதையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.

தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.

எனினும், ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஃபுகுஷிமா அணு உலையில் தேக்கி வைக்கப்பட்ட கதிரியக்க நீரை சுத்திகரிக்கப்பட்டு கடலில் வெளியேற்றும் பணி கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியுள்ளது.

அந்த நீரைக் கடலில் கலந்தால், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்போவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT