முகப்பு
உலகம்

ஹமாஸை அழிக்கும்வரை போர் ஓயாது: இஸ்ரேல்

இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2023 at 12:16 PM
காயமுற்ற பாலஸ்தீனர் | AP
பகிர்:

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் நீடித்தாலும் அதற்கேற்ப தயாராககி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7 ஹமாஸ் இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கி தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தியுள்ளது.

Advertisement

பலியான பாலஸ்தீனர் மற்றும் அவரது உறவினர்கள் | AP

இதில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700-ஐ கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகியிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

இவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைக் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் கெடுபிடிகள் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவிற்குள் நுழையும் பொருள்களைச் சோதனை செய்ய இரண்டாவது சோதனை சாவடியை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.

அரசியல் பார்வையாளர்கள், இஸ்ரேல் காஸாவிலிருந்து ஒட்டுமொத்தமாக மக்களை வெளியேற்ற முனைவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.