உலகம்

7,000 விமான நிலைய பணியாளர்களுக்கு ஊதியம் நிலுவை!

DIN

சர்வதேச பாகிஸ்தான் விமான நிலையத்தின் 7000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையெனத் தகவல் வெளியாகியுள்ளது.  விமான நிலைய நிர்வாகம் பொருளாதார சிக்கல்களில் மாட்டியிருப்பதே ஊதிய நிலுவைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

7,000 ஊழியர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாத நிலையில், விமான நிலையத்தில் நடந்துவரும் எரிபொருள் பற்றாக்குறையே இந்த பிரச்னைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த எரிபொருள் பற்றாக்குறை குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அடுத்த மாதத்திற்குள் நிலுவை ஊதியத் தொகை செலுத்தப்படவில்லையெனில், போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாள்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என விமான நிலையத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

மேலும், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (PSO) வழங்கிய குறைந்த எரிபொருளால், பல சர்வதேச விமானங்களை ரத்து செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலைய நிர்வாகத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தான் விமான நிலையம் தற்போது வங்கிகளிடம் கடன் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT