பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0-ஆகப் பதிவானது
பாகிஸ்தானில் திங்கள்கிழமை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று (டிச.18) காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அமித்ஷா மக்களவையில் பேசாமல் தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்
Advertisement
Advertisement
இதனால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பாக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ‘எதிர்காலத்தில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்’
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.