முகப்பு
உலகம்

கராச்சி வந்தடைந்த ரயிலில் வெடிகுண்டு!

பாகிஸ்தான் கராச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
கோப்புப்படம்.
பகிர்:

பாகிஸ்தானில் உள்ள கராச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்த பேஷவார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது என பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவலர் ஒருவர் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு அளித்த தகவலின்படி, கராச்சியை வந்தடைந்த ரயிலில் இருக்கைக்கு கீழ் சந்தேகத்திற்குரியதாக இருந்த பையில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மொத்தம் 5 கிலோ எடை கொண்டிருந்ததாகவும், அதில் 2 கிலோகிராம் வெடிபொருள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →