முகப்பு
உலகம்

புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்தது பாகிஸ்தான்! காரணம் இதுதான்!

பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து கொல்லப்படும் நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

Updated On : 29 டிசம்பர், 2023 at 12:18 PM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:03 PM

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கக்கர், 'போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார். 

மேலும், இஸ்ரேல் வன்முறையில் எல்லை மீறி செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். 

Advertisement

பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.  

பாகிஸ்தான் இதுவரை இரண்டுமுறை மனிதநேய உதவிகளை காஸாவிற்கு அனுப்பியுள்ளது. மூன்றாவது முறை உதவிகளை அனுப்பவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.