உலகம்

துருக்கியில் ஆச்சரியம்! 9 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தாய், 2 குழந்தைகள்!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

DIN

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த கொடூரமான சம்பவத்துக்கு இடையிலும் சில ஆச்சரியமான நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. 

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம். பல நாள்களாக இடிபாடுகளுக்கு இடையில் இருந்தும் உயிருடன் சிலர் மீட்கப்பட்டு வருவது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. 

பூகம்பம் நிகழ்ந்து 128 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரும் உயிருடன் இருந்த 2 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. சமீபத்தில் 74 வயது மூதாட்டி ஒருவரும் அதன் தொடர்ச்சியாக 46 வயது பெண் ஒருவரும் மீட்கப்பட்டார். 

இப்போது அன்டக்யாவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே 9 நாள்களுக்குப் பிறகு தாய் மற்றும் இரு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

எலா என்ற பெண்ணும் மெய்சம், அலி என்ற அவரது இரு குழந்தைகளும் மீட்கப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. சரியாக 228 மணி நேரம் தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி தன் உயிரையும் தக்கவைத்துள்ளார் எலா. மிகவும் நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT