உலகம்

ஜப்பானில் வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்: இதுவரை 77 லட்சம் கோழிகள் அழிப்பு!

IANS

ஜப்பானில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இதுவரை 54 மாகாணங்களில் இந்தக் காய்ச்சல் பரவியுள்ளது. 

டோக்கியோ, ஜப்பானில் 2022 அக்டோபரில்  முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிவரும் இந்த காய்ச்சல் தற்போது பல்வேறு மாகாணங்களுக்கும் பரவியுள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 

ஜப்பானில் 23 மாகாணங்களில் இருந்த பறவைக் காய்ச்சலானது பருவ காலநிலை மாற்றத்தால், தற்போது 54 மாகாணங்களுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. முன்னதாக 2020-2021-ம் ஆண்டுகளில் 52 மகாணாங்களில் பருவியிருந்த நிலையில், இந்தாண்டு இது மேலும் அதிகரித்துள்ளது. 

ஃபுகுவோகாவில் உள்ள ஒரு ஈமு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியதால் சுமார் 430 பறவைகள் அழிக்கப்பட்டன. இதற்கிடையில் சிபாவில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 10 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன. 

54 மாணங்களில், மொத்தம் இதுவரை 77.5 லட்சத்துக்கும் அதிகமான கோழிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற கோழிகளுக்கு பரவாமல் இருக்க அவை கொல்லப்பட்டன. 

பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT