உலகம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 7 பேர் பலியாகினர்.

DIN

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 7 பேர் பலியாகினர்.

சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள  நடன விடுதியில் 10 பேர் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதியான மான்டெரே பாா்க்கில் பூா்விக ஆசியா்கள் மீது சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்தனா். கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்தப்பட்ட உவால்டே பள்ளித் தாக்குதலுக்குப் பிந்தைய மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொண்டாடப்படும் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் இனவெறித் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவா் 75 வயது ஹூ கேன் டிரான் என்ற ஆசியா் எனவும், அவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல் துறையினர்  அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT