கோப்புப்படம் 
உலகம்

ஈரானில் நிலநடுக்கம்: 7 பேர் பலி

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

DIN

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

ஈரான் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஈரான்-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள கோய் நகரில் சனிக்கிழமை இரவு 9:44 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது. கோய் நகருக்கு தென்-தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.

ஈரானின் மேற்கு அஜர்பைஜான் நகரின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் நகரின் தலைநகரான தப்ரிஸ் உள்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்! மாநிலங்களவையில் தகவல்!

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகன் விராட் கோலி!

தாய் கிழவி வாரா பாடல்!

SCROLL FOR NEXT