உலகம்

உக்ரைனுக்கு மேலும் ரூ. 3,260 கோடி மதிப்பில் ராணுவ உதவி!

DIN

உக்ரைன் நாட்டிற்கு மேலும் 400 மில்லியன் டாலர்( ரூ. 3,260 கோடி) மதிப்புள்ள ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. 

அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்து ஓராண்டை கடந்துவிட்டது. 

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. 

அந்தவகையில் அமெரிக்கா, உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. போரின் இடையே உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ஒருமுறை அமெரிக்கா சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதுபோல சமீபத்தில் ஜோ பைடனும் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார். 

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும்  400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 3,260 கோடி ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT