உலகம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஐரோப்பாவில் தங்கம் வென்றார்

இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்வீடனில் நடைபெற்ற ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

DIN


இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்வீடனில் நடைபெற்ற ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள செவெனோக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் ஷர்மா, இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தனது தந்தை தினமும் யோகா செய்வதைப் பார்த்து மூன்று வயதாக இருந்தபோது யோகா பயிற்சி செய்யத் தொடங்கினார். அதனையடுத்து பல உலக யோகா சாம்பியன்ஷிப்களை வென்றார்.

முன்னதாக, கடந்த வார இறுதியில், மல்மோவில் உள்ள ஸ்வீடிஷ் யோகா விளையாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஐரோப்பிய போட்டியில் பங்கேற்ற ஈஸ்வர் ஷர்மா ​​2023-ஆம் ஆண்டுக்கான 12-14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கோப்பை வென்றார்.

கரோனா பெருந்தொற்று முடக்கத்தின்போது 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தினசரி யோகா வகுப்புகளை வழிநடத்திய சர்மா, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனால் ‘பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

யோகாவில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் ஐந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் சிட்டிசன் யூத் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT