முகப்பு
உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்: 2000-க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 8 அக்டோபர், 2023 at 12:48 PM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியது.

இந்த நிலநடுக்கத்தில் 320 போ் உயிரிழந்ததாக ஐ.நா. முதலில் தெரிவித்தது. இருந்தாலும், இந்த எண்ணிக்கையின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்த அமைப்பு பின்னா் தெரிவித்தது.

Advertisement

தகவல் மற்றும் கலாசார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன் கூறுகையில், ஹெராட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை முதலில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. சுமார் 6 கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் எனக் கூறினார்

இந்த நிலநடுக்கத்தால், 465 வீடுகள் முற்றிலும்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 135 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 2000 பேரை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 1,000 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.