மலேசியாவில் போராட்டத்தின் போது பாலஸ்தீன கொடியை ஏந்திய பெண் 
உலகம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக மக்கள் போராட்டம்!

இஸ்ரேல் -பாலஸ்தீன போர் 15-வது நாளாகத் தொடர்ந்து வருகிற வேளையில் உலகம் முழுவதும், போர் நிறுத்தம் வேண்டி போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

DIN

மேற்குலக நாடுகளின் அரசுகள், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கிற வேளையில் உலகம் முழுவதிலும் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.

காஸாவில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் மேலும் அதிகமாகியிருப்பதாக களத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கங்களில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் குழுவை தரைவழியாக முன்னேறி தாக்கும் இஸ்ரேலின் திட்டத்தை, இலகுவாக்க பெரும்பாலான கட்டிடங்கள் காஸாவில் தகர்க்கப்பட்டு வருகின்றன.
 
பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,380-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த போர் தொடருமானால் இன்னும் பலர் பலியாக நேரிடும்.

இந்த நிலையில், உடனடி போர் நிறுத்தம் கோரி உலக நாடுகள் பலவற்றில் மக்கள் போராடி வருகின்றனர்.

லண்டன்

லண்டன் தெருக்களில் குறைந்தது 1,00,000 பேராவது பாலஸ்தீன கொடியை ஏந்தி காஸாவில் குண்டு வீசுவதை நிறுத்தச் சொல்லி கோஷமிட்டுள்ளனர். 

வடக்கு அயர்லாந்தின் முக்கிய நகரமான லண்டன்பெர்ரியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  

அயர்லாந்து குடியரசின் எல்லையில் டப்ளின் நகரம் நோக்கி ஆயிரக்கணக்கானோர், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி பேரணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சியாட்டல்

பிரான்ஸில் பல்வேறு பகுதிகளில், “நாங்கள் அனைவரும் பாலஸ்தீனர்கள்” என்கிற முழக்கத்தோடு மக்கள் அணிவகுத்து சென்றுள்ளனர்.

ஜெர்மன் காவலர்கள், 7,000 பேர் கலந்து கொண்ட போராட்டம் தியுசல்டார்ஃப்பில் நடந்ததாகத் தெரிவித்துள்ளார்கள்.

மலேசியா

ரோம், பார்சிலோனா, டொரண்டோ, நியூயார்க், மலேசியா என உலகின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் என பல்வேறு இன மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT