துருக்கி 
உலகம்

காஸாவுக்கு உதவிகரம் நீட்டும் துருக்கி!

மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருள்களோடு துருக்கியின் விமானம் எகிப்துக்கு புறப்பட்டுள்ளது.

DIN

காஸாவில் தொடர்ந்து வரும் போரால் கிட்டதட்ட 23 லட்சம் மக்கள் நாட்டின் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களின்றி தவித்து வருகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் வலியுறுத்தலால் இஸ்ரேல் நேற்று (சனிக்கிழமை),  எகிப்திலிருந்து காஸாவுக்குள் நுழையும் ராஃபா எல்லையைத் திறக்க அனுமதித்தது.

ஏற்கெனவே அத்தியாவசிய பொருள்களுடன் தயார் நிலையில் இருந்த 20 டிரக்குகள் காஸாவுக்கு சென்றுள்ளன. உணவு பொருள்களை மட்டும் அனுமதித்துள்ள நிலையில் எரிபொருள்கள் அனுமதிக்கப்படவில்லை.

மின்சாரமின்றி ஏற்கெனவே பாதி செயல்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மேலும் தாக்குபிடிப்பதற்கு சிரமமான சூழலே நிலவுகிறது. 

எனினும், அனுமதிக்கப்பட்ட பொருள்களின் அளவு என்பது கடலில் ஒரு துளி போன்றது என விமர்சிக்கின்றனர் மனிதத்துவ ஆர்வலர்கள்.

இந்த நிலையில், துருக்கி அரசு காஸா மக்களுக்கு உதவும் பொருட்டு மருந்து பொருள்கள், மருத்துவ உபகரணங்களை விமானத்தில் எகிப்துக்கு அனுப்பியுள்ளது. அந்த விமானத்தில் 20 மருத்துவர்களும் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT