தரைவழி தாக்குதலை விரிவப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பதுங்கியிருக்கும் சுரங்கங்கள் என அறியப்படும் இலக்குகள் மீதான வான் வழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஊடகங்களிடம் பேசியபோது, ராணுவம் காஸாவில் மேற்கொண்டு வரும் தரைப்படை தாக்குதலை விரிவுப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், “கடந்த நாள்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடர்ச்சியாக தரைப்படைகள் வெள்ளிக்கிழமை ( அக்.27) இரவு தங்களின் தாக்குதலை மேலும் விரிவுபடுத்த உள்ளன” எனக் கூறினார்.
இஸ்ரேல் போர் விமாங்கள் காஸாவில் தாக்குதலுக்கான 150 இலக்குகளை நிர்ணயித்துள்ளன. இந்த இலக்குகளில் பயங்கரவாதிகளின் சுரங்கங்கள், பாதாள வாழ்விடங்கள், கட்டுமானங்கள் ஆகியவை அடக்கம்.
அக். 7-ம் தேதி தொடங்கிய போரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு மேலாக மேற்கொண்டது. இந்த நிலையில், கடந்த அக். 25 மற்றும் அக்.26 தேதிகளில் தரை வழியாக இஸ்ரேல் படைகள் காஸா பகுதிக்குள் குறிப்பிட அளவுக்கு ஊடுருவல் செய்தன.
80 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடிய 100 கிமீ வரை பரந்திருக்கும் ஹமாஸின் சுரங்க வலைப்பின்னலை இஸ்ரேல் எதிர்கொள்ள அசாத்தியமான சூழலே நிலவுகிறது. இதனை சமாளிக்க இஸ்ரேல், ஸ்பாஞ்ச் பாம்ஸ் என்னும் ஆயுதத்தை பயன்படுத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்க: காஸாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் படைகள்: தகவல் தொடர்பு துண்டிப்பு
இஸ்ரேலின் ரகசிய ஆயுதம் எனக் கருதப்படும் இந்த ஸ்பாஞ்ச் பாம் ஒருவகையாக வேதிப்பொருட்கள் அடங்கிய கையெறிகுண்டு. இவை வெடிக்காது. ஆனால் சுரங்கங்களின் இடைவெளியையும் வாயிலையும் அடைக்க இவை உதவக் கூடும்.
இரண்டு வெவ்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் கலன்கள் ஒரு உலோக தடையால் பிரிக்கப்பட்டிருக்கும். இயக்கத் தொடங்கியதும் இரண்டு திரவ வடிவ வேதிப்பொருள்களும் இரண்டறக் கலந்து செயல்படும்.
2021 இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காஸா எல்லையில் உருவாக்கிய மாதிரி சுரங்கத்தில் இதனை பயன்படுத்தி சோதனையில் ஈடுப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.