உலகம்

சமூக ஆர்வலராகவும் உளவாளியாகவும் இரட்டை வாழ்க்கை! அமெரிக்காவில் சீன உளவாளி!

அமெரிக்காவை 28 ஆண்டுகளாக உளவு பார்த்த சீன நாட்டைச் சேர்ந்தவர் கைது

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சீனாவைச் சேர்ந்தவர், சுமார் 28 ஆண்டுகளாக உளவு பார்த்து வந்துள்ளார்.

சீனாவில் பிறந்த ஷுஜுன் வாங், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, 1994 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். ஷுஜுன், அமெரிக்காவில் தன்னை ஒரு கல்வியாளராகவும் சமூக ஆர்வலராகவும் வெளிக்காட்டிக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சீனாவுக்காக அமெரிக்காவை ஷுஜுன் உளவு பார்ப்பதாக, அமெரிக்க வழக்குரைஞர்கள் 2022 ஆம் ஆண்டில் ஷுஜுன்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, ஷுஜுனிடம் அமெரிக்க வழக்கறிஞர் எலன் சைஸ் விசாரணை மேற்கொண்டதில், சீனாவை எதிர்க்கும் நபர்களுடன் நெருக்கமாக இருப்பதற்காக, ஷுஜுன் சீன அரசை எதிர்ப்பதுபோல பாசாங்கு செய்ததும், பின்னர் சீனாவை எதிர்க்கும் நபர்களையும் தகவல்களையும் சீனாவுக்கு உளவு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பானது, 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 9 ஆம் தேதியில் வழங்கப்படும் என்று தெரிகிறது; குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT