உலகம்

ஜப்பானை தொடர்ந்து வடகொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை

DIN

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் கடற்கரையோர நகரங்களான இஷிக்வா, நிகாடா, டொயாமா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடற்பகுதிகளில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  அலைகள் 2.08 மீட்டர் (6.8 அடி) வரை அதன் கரையை அடையலாம் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT