மெக்சிகோ வளைகுடா பகுதியான வெராக்ரூஸில் இளைஞர் ஒருவர் சுடப்பட்ட விவகாரத்தில் நான்கு காவலர்கள் விசாரணையில் உள்ளனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர்வாசிகள் காவல் அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர்.
27 வயதான அரேலானோ க்ரூஸ் என்கிற இளைஞர் வெள்ளிக்கிழமை இரவு அவரது காரில் பயணித்துள்ளார். க்ரூஸின் வாகனத்தை காவலர்கள் நிறுத்த முயன்றபோது அவர் பயத்தில் நிறுத்தாமல் சென்றிருக்கலாம் என க்ரூஸின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
அரேலானோ தனது தந்தைக்கு அழைத்து பாட்டி வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்துள்ளார். பாட்டியின் வீட்டுக்குச் சென்றடைந்த க்ரூஸ், காரிலேயே சுடப்பட்டு இறந்துள்ளார்.
அவரது பெற்றோர்கள் நிகழ்விடத்துக்கு பின்னர் வந்து சேர்ந்தனர். இது குறித்து காவலர்களிடம் கேள்வி எழுப்பியபோது அவர்கள் முறையாக பதிலளிக்காததால் உள்ளூர்வாசிகள் காவலர்களைத் தாக்கியுள்ளனர்.
ஒரு காவலர் தப்பிப் போக மீதி நால்வர் பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் சிறப்பு காவல் படையால் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.
ஆவேசம் கொண்ட மக்கள் காவலர்களின் கார்கள், வேன் மற்றும் டவுன் ஹால் கட்டடத்தை தீ வைத்துள்ளனர்.
காவல் அதிகாரிகளால், உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக முறைகேடுகளைச் சந்தித்து வருவதாக தெரிகிறது.
மெக்சிகோவில் பரவலான தண்டனையின்மை நிலவுகிறது. வெறும் 1 சதவிகித குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக தேசிய புள்ளியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
மத்திய அமெரிக்காவோடு அமெரிக்காவை இணைக்கும் பாதையில் உள்ள நகரமான வெராக்ரூஸ், ஒருங்கிணைந்த குற்றச் செயல்களோடு தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கக்கூடிய இடமாக உள்ளது.
இதையும் படிக்க: ஐ.நா. பொதுச்சபைத் தலைவா் இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் பல்வேறு முகமைகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மீது பலமுறை அங்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.