உலகம்

இந்தியா ஐந்தாவது இடம்!: மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம்

DIN

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் மூன்றுபேர் அவமதித்து வலைதளத்தில் செய்த பதிவு, இந்தியா - மாலத்தீவிற்கு இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியது. பல இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்தனர். 

பாய்காட் மாலத்தீவு (Boycott Maldives) என்ற ஹேஷ்டேக் மூலம் மாலத்தீவை தொடர்ந்து புறக்கணித்தனர். ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) போன்ற சுற்றுலா பயண செயலிகள் மாலத்தீவை தங்களது வலைதளத்திலிருந்து நீக்குவதாகத் தெரிவித்தன. 

இந்நிலையில், மாலத்தீவிற்கு இந்தியர்களின் வரவு வெகுவாகக் குறைந்திருப்பதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மாலத்தீவிற்கு அதிகம் சுற்றுலாப்பயணிகளை அனுப்பும் நாடுகளில் முதலிடத்திலிருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. 

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் இந்தியர்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாப் பயணங்களுக்கு தொடர்ந்து மாலத்தீவை தேர்வு செய்துவந்த இந்தியர்கள் இப்போது மாலத்தீவை புறக்கணித்துவருகின்றனர். 

ஜனவரி மாதத்தில் மட்டும் 1.74 லட்சம் சுற்றுலாப்பயணிகள் மாலத்தீவிற்குச் சென்றுள்ளனர். அதில் 13,989 பேர் மட்டுமே இந்தியர்கள். ஜனவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் ரஷியாவிலிருந்து வந்துள்ளனர். இரண்டாம் இடத்தில் இத்தாலி, மூன்றாம் இடத்தில் சீனா மற்றும் நான்காம் இடத்தில் பிரிட்டன் இடம்பெற்றுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT