முகப்பு
உலகம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 14 பேர் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 14 பேர் பலியாகினர்.

Updated On : 10 ஜூலை, 2024 at 10:37 AM
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் இமயமலைப் பகுதி மலைப்பாதையில் இருந்து ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 14 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

நீலம் பள்ளத்தாக்கில் இந்த சம்பவம் நடந்ததாக அரசு நிர்வாகி நதீம் ஜான்ஜுவா தெரிவித்தார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மீட்புக் குழுவினர் இறந்தவர்களின் உடல்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மோசமான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்துச் சட்டங்கள் காரணமாக பாகிஸ்தானில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன.

கடந்த மாதம் இதே மாவட்டத்தில் வேன் ஒன்று ஆற்றில் விழுந்து 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →