சித்தரிக்கப்பட்ட படம் 
உலகம்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக ரஷியா உள்ளது: உக்ரேனிய பெண்

இறந்த உக்ரேனிய வீரர்களின் உடல் உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பதாகக் குற்றச்சாட்டு

DIN

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க்கைதிகளின் உடல்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெறப்படும் வீரர்களின் உடல்களில் இருந்து உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியுபோல் பாதுகாவலர்களின் சுதந்திரத்தின் அமைப்பின் தலைவர் லாரிசா சலேவா கூறுவதாவது, ``ரஷிய அதிபர் புதினின் படைகளால் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பல உக்ரைனிய வீரர்களின் உடல்கள் முக்கிய உறுப்புகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷிய கூட்டமைப்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தை செயல்படுகிறது. இந்த குற்றத்தை நிறுத்துவதற்காக இதைப் பற்றி உலகம் முழுவதும் பேச வேண்டும். அதுமட்டுமின்றி, உயிருடன் திருப்பி அனுப்பப்படும் வீரர்களும் மோசமான உடல்நிலையுடனேயே வருகின்றனர்” என்று தெரிவிக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ரஷிய படைகள், `ரஷிய படைகளை அரக்கத்தனமாக சித்தரிப்பதற்காக உக்ரைன் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதி’ என்று விமர்சித்துள்ளது.

10,000-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ரஷியாவின் பிடியில் இருப்பதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

பார்வை தாக்கும்... சாந்தினி!

SCROLL FOR NEXT