உலகம்

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்தார்.

விண்வெளி நிலையத்தில் 322 நாள்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் இன்று செல்லவிருந்தார்.

அந்த நாட்டின் போயிங் நிறுவனம் ‘ஸ்டாா்லைனா்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கி வருகிறது. அந்த ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது.

ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவிருந்த ஸ்டாா்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்லவிருந்தார்.

இந்த நிலையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT