சேதமடைந்த ஜூசியாஹ் எல்லைப் பகுதி IANS
உலகம்

சிரியா - லெபனான் எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியா - லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலில் இன்று (நவ. 24) ஈடுபட்டது.

DIN

சிரியா - லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலில் இன்று (நவ. 24) ஈடுபட்டது.

சிரியாவின் மேற்கு பகுதியில், லெபனான் எல்லையையொட்டி உள்ள ஜூசியாஹ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் பலியானோர் குறித்த விவரங்கள் இன்னும் சிரியா மற்றும் லெபனான் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

சிரியா - லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக ஜூசியாஸ் அறியப்படுகிறது. இந்த எல்லைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பதற்றம் நிறைந்த பகுதியாகவே உள்ளது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து ஜூசியாஹ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியதால், பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் சிரியாவின் பால்மைரா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் சிரியா எல்லையில் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேல் - சிரியா இடையே கடந்த 2011 முதல் போர் நடைபெற்று வருகிறது. சிரியா மற்றும் சிரியாவுக்கு உதவும் ஈரான் வீரர்களை குறிவைத்து இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 34 பேர் பலி; 84 பேர் காயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

SCROLL FOR NEXT