FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42,800 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில், இதுவரையில் 17000 குழந்தைகள், 11400 பெண்கள் உள்பட 42800 பாலஸ்தீனர்கள் பலி

Updated On : 25 அக்டோபர் 2024, 7:02 pm IST
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் சேதமடைந்த கட்டிடங்கள் - கோப்புப் படம்
பகிர்:

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், வெள்ளிக்கிழமையில் (அக். 25) இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். அவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

டிரோன் தாக்குதலில் பலியாகும் மக்களில், பெரும்பாலும் உணவுக்காக வெளியில் நடமாடுபவர்கள்தான் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். அந்த நேரத்தில், விடுதியில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் தங்கியிருந்துள்ளனர். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என காஸா செய்தி நிறுவனங்கள் இஸ்ரேலை குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கனை ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாதி சந்தித்து பேசினார்.

காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில், இதுவரையில் 17,000 குழந்தைகள், 11,400 பெண்கள் உள்பட 42,800 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் சுமார் 1000 சுகாதாரப் பணியாளர்களும், 220 ஐ.நா. அவையைச் சேர்ந்த 220 பேரும் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments