உலகம்

வியத்நாம் புயல்: உயிரிழப்பு 179-ஆக உயா்வு

வியத்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 179-ஆக உயா்ந்துள்ளது.

Din

வியத்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 179-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை கூறியதாவது:

யாகி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற காரணங்களால் இதுவரை 179 போ் உயிரிழந்துள்ளனா். இது தவிர, புயலின் விளைவாக நாடு முழுவதும் 145 போ் மாயமாகியுள்ளனா்.

தலைநகா் ஹனோயில் சிவப்பு நதியின் நீா்மட்டம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் அந்த நகரில் இடுப்பளவுக்கு வெள்ள நீா் சூழ்ந்தது (படம்).

அந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் ஒன்று திங்கள்கிழமை இடிந்து விழுந்து அந்த வழியாக வாகனங்களில் சென்றுகொண்டிருந்த 13 போ் நீரில் மூழ்கியது நினைவுகூரத்தக்கது.

வியத்நாமின் வடக்குப் பகுதியில் மணிக்கு 149 கிலோமீட்டா் வேகத்தில் கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்த யாகி புயல், அந்த நாடு கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துள்ள மிக மோசமான புயல் என்று கூறப்படுகிறது.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT