சீனாவில் ஹாலிவுட் படங்கள்... 
உலகம்

ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் தடை?

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பு எதிரொலியாக ஹாலிவுட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல்.

DIN

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பு எதிரொலியாக ஹாலிவுட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% வரி விதித்த டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனம் ஸின்ஹுவா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவிக்கின்றன. அமெரிக்காவை விட சீனாவில் குறிப்பிடத்தகுந்த லாபத்தைப் பெறும் ஹாலிவுட் படங்களும் இருந்துவருகின்றன.

மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் ஹாலிவுட் படங்கள் வெளியாகின்றன. ஹாலிவுட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது.

இதனிடையே ஹாலிவுட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு மேற்கொண்ட ஒப்பந்தங்களின்படி, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், ஹாலிவுட் படங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விநியோகப் பணிகளைச் செய்துவந்தனர்.

வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஆண்டுக்கு புதிதாக 34 வெளிநாட்டுப் படங்கள் சீனாவில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கான டிக்கெட் விற்பனையில் 25% வருவாய் சீன அரசுக்குச் செல்கிறது. சிறிய தொகையில் எடுக்கப்படும் படங்கள், இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு உள்ளூர் விநியோகஸ்தரால் வெளியிடப்படுகிறது.

சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில், திரைப்படத் துறையும் ஒன்றாக உள்ளது. தற்போது அமெரிக்கா விதித்துள்ள திருத்தப்பட்ட வரி விதிப்பின்மூலம் திரைப்பட வணிகமும் இரு நாடுகளுக்கு இடையே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமெரிக்கர்களுக்கு நிரந்தர வரி! டிரம்ப்பை விமர்சித்த எலான் மஸ்க்கின் சகோதரர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT