ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 516 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 516 பேர் காயமடைந்ததாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தின்போது, அதிகளவில் கரும்புகை எழுந்ததை அப்பகுதியில் இருந்தோர் விடியோ பதிவு செய்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இங்கு எண்ணெய் மற்றும் வேதிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகித வர்த்தகம் இங்கிருந்து நடைபெறுகிறது. ஆண்டுக்கு 80 மில்லியன் டன் பொருள்களை இந்த ஏற்றுமதி நிலையம் கையாள்கிறது.
இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.