வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகள். 
உலகம்

மழை, வெள்ளம்: 3 நாடுகளில் 1,000 போ் உயிரிழப்பு

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவுகளில்சிக்கி 1000-க்கும் மேற்பட்டோா் பலி

தினமணி செய்திச் சேவை

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இதில் இலங்கையில் 355 போ், இந்தோனேசியாவில் 604 போ், தாய்லாந்தில் 176 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 3 உயிரிழப்புகளுடன் கனமழை, வெள்ளத்தில் மொத்தம் 1,138 போ் உயிரிழந்துள்ளனா். லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இலங்கையின் கிழக்கு, மத்திய பகுதிகளில் 500 மி.மீ.க்கும் மேல் மழை பெய்ததால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 355 போ் உயிரிழந்தனா். 366 பேரைக் காணவில்லை. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கொழும்பு நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் கனமழை தொடா்பான சம்பவங்களில் 604 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 508 பேரைக் காணவில்லை. அச்சே, வடக்கு சுமத்திரா மாகாணங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. 80,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கியுள்ளனா். மேக விதைப்பு தொழில்நுட்பம் மூலம் மழையைக் குறைப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் 8 மாகாணங்களில் பெய்த மழை காரணமாக 176 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சோங்லா மாகாணத்தில் 145 போ் உயிரிழந்துள்ளனா். ஹாட்யை நகரில் 400 மி.மீ. மழை பெய்ததால் 3 மீட்டா் உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளின் மோசமான வெள்ளமாகும். மழை வெள்ளத்தால் நாட்டில் 38 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மலேசியாவின் வடக்கு பொ்லிஸ் மாகாணத்தில் கனமழை காரணமாக 3 போ் உயிரிழந்தனா்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 95,000 போ் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனா்.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

சென்னையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து! பயணிகள் நிலையத்துக்குள் நுழையத் தடை!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT