கோப்புப் படம் 
உலகம்

சூடான்: துணை ராணுவப்படை தாக்குதலில் 54 பேர் பலி!

சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மருத்துவமனை அருகேயும் குண்டுவீச்சு

DIN

சூடானில் துணை ராணுவப் படையினரின் தாக்குதலால் 54 பேர் பலியாகினர்.

சூடானில் ஓம்டர்மேன் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 54 பேர் பலியாகினர். தாக்குதலில் பலரும் காயமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலை துணை ராணுவப் படையினர் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த அந்நாட்டு அரசு, `சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீதான அப்பட்டமான மீறல்’ என்று தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும், மருத்துவமனை அருகில் குண்டு வீசியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் வெளியே சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும், காயமடைந்தவர்களுக்கு போதிய இடவசதியும் செவிலியர்களும் இல்லாத நிலையில், தரையிலேயே வைத்து சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சூடானில் சுமார் 30 ஆண்டுகளாக சா்வாதிகார ஆட்சி செய்து வந்த அதிபா் ஒமா் அல்-பஷீரை, கடந்த 2019-ஆம் ஆண்டு ராணுவம் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

SCROLL FOR NEXT