3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!
பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார். 3 சிறுமிகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். மேலும், இந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய ரூடாகுபானாவுக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயதுடையவருக்கு இவ்வாறான தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை என்று நீதிபதி கூறினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அமெரிக்காவில் 538 பேர் கைது!
மேலும், வருங்காலத்தில் அவர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார் என்று நம்பிக்கை பிறக்கும்பட்சத்தில், முன்கூட்டியே அவர் விடுவிக்கப்படுவார் என்றும் தீர்ப்பில் கூறினார். இருப்பினும், 52 சிறை தண்டனை தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதுதவிர, இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னரே, பொது இடங்களில் ஆயுதங்களைக் கையாண்ட காரணத்தால் ரூடாகுபானாவையும், அவரது தாயாரையும் காவல்துறையினர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.