அயத்துல்லா அலி கமேனி 
உலகம்

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம்! -டிரம்ப்

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து கமேனி சரணடைவாரா?

DIN

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடிக்கிறது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய இஸ்ரேல், ஈரான் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது இஸ்ரேல் - ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கும் நிலையில், அவரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் - ஈரான்

கமேனி சரணடைந்துவிட்டால் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று டிரம்ப் எண்ணுகிறார்.

இதுகுறித்து டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது: ஈரானின் உச்சபட்ச தலைவராக அறியப்படுபவரைக் கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்குமிடம் எங்களுக்கு தெரியும். இந்த நிலையில், அவர் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்றும் டிரம்ப் சொல்லியிருக்கிறார்.

எனினும், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து கமேனி சரணடைவாரா என்பது கேள்விக்குறியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சட்டமும் இலக்கியமும்!

ஆஸி. ஒருநாள் தொடர்: வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு!

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

SCROLL FOR NEXT