காஸா இனப் படுகொலையை நிறுத்தக்கோரிய போராட்டத்தில்...  AP
உலகம்

காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல் குறித்து கத்தாருக்குச் சொந்தமான அல்ஜஸீரா செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பியர்ஸ் மோர்கன், காஸா உடனான போரில் இஸ்ரேலின் விதிமீறல் நடவடிக்கைகள் குறித்துக் கூறினார்.

அவர் பேசியதாவது, ''கடந்த மூன்று மாத கால போரில் காஸாவில் குழந்தைகள், பெண்கள் இடையே பட்டினிக் கொடுமை அதிகரித்துள்ளது. பிறகு, உணவு உள்ளிட்ட சிறிய அளவிலான மனிதாபிமான அடிப்படை உதவிகள் பெரும்பாடுபட்டு உள்ளே நுழைந்தது.

அதனைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தபோது அவர்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் வெளிப்படையாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இது குறித்து அடுக்கடுக்கான கேள்களை முன்வைக்கலாம்.

ஆனால், இஸ்ரேல் என்ன செய்கிறது? சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதிப்பதற்கு தொடர்ந்து மறுக்கிறது. பிபிசி உள்ளிட்ட பிரபலமடைந்த பல்வேறு சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களில் ஒருவரைக் கூட காஸாவினுள் இஸ்ரேல் அனுமதிப்பதில்லை.

காஸாவில் உணவுக்காக போராடும் அந்நாட்டு மக்கள்

காஸாவில் ஒரு ஊடகம் கூட இருக்கக் கூடாது என இஸ்ரேல் நினைக்கிறது. உண்மையில் காஸாவில் என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்ய அவர்கள் (இஸ்ரேல்) விரும்பவில்லை. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால், ஊடகங்களுக்கு அனுமதி கொடுங்கள்'' எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும், காஸாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவிடவில்லை. ஈரான் உடன் ஆயுதங்களை ஏவி சண்டியிட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலும் காஸா முகாம்களில் உள்ள மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று முதல் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காஸாவில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 56,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

SCROLL FOR NEXT