கோப்புப் படம் 
உலகம்

ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!

உக்ரைன் ராணுவத்தின் டிரோன்களை ரஷியா சுட்டு வீழ்த்தியுள்ளதைப் பற்றி...

DIN

ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியா நிலப்பகுதி மற்றும் அந்நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 121 டிரோன்களை நேற்று (மே.1) ஒரே இரவில் ரஷியா சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தத் தகவலை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கடற்படை தளம் அமைந்துள்ள கிரிமியாவின் செவஸ்டபோல் நகரத்தின் மீது இயக்கப்பட்ட 89 டிரோன்களும், கருங்கடல் பகுதியில் 23 டிரோன்கள் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், செவஸ்டபோல் நகரத்தின் ஆளுநர் மிகாயில் ரஸ்வோஸாயேவ் கூறியதாவது: ”உக்ரைன், டிரோன்கள் மூலம் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், ரஷியாவின் கடற்படை மற்றும் நிலம் சார்ந்த விமானப் படையின் கூட்டு முயற்சியினால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன், இந்தத் தாக்குதலில் க்ராஸ்னோதார் பகுதியில் 4 டிரோன்களும், ஒர்யோல் பகுதியில் 2 டிரோன்களும் மற்றும் பிரயான்ஸ்க், பெல்கோரோத் ஆகிய பகுதிகளில் தலா 1 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT