ஜெர்மனியில் விமான சேவையை சீர்குலைக்கும் ‘ட்ரோன்கள்’!
ஜெர்மனியில் விமான சேவையை சீர்குலைத்த ஒற்றை ட்ரோன்: பெர்லினில் விமானப் போக்குவரத்து நிறுத்தம்!
ஜெர்மன் வான்வெளியில் ட்ரோன்கள் பறக்கவிடப்படுவதால் விமான சேவை தடைபடுவது வாடிக்கையாகி வருகிறது.
நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வான்வெளிப் பகுதிகளில் ட்ரோன் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பரில் அது உச்சம் கண்டது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் விமானப் போக்குவரத்து இடைக்காலமாக தடைபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த மாதத்தில் ஜெர்மனியின் முனிச் விமான நிலையம் வெறும் 24 மணி நேர கால அவகாசத்துக்குள் 2 முறை மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ஒற்றை ட்ரோனால், விமான சேவை பாதிப்புக்குப் பின் சீரானது. பெர்லினின் பிராண்டென்பர்க் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை(அக். 31) இரவில் ட்ரோன் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, விமான இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதனால் பெர்லினின் பிராண்டென்பர்க் விமான நிலையத்தில் விமான சேவை வெள்ளிக்கிழமை(அக். 31 - இரவு 8.08 மணியிலிருந்து 9.58 மணி வரை) சுமார் 2 மணி நேரம் பாதிப்புக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து, இடைக்காலமாக தடைபட்ட விமானப் போக்குவரத்து சனிக்கிழமை(நவ. 1) காலையில் சீரானது.
A late evening drone sighting at Berlin's airport suspended flights for nearly two hours, according to the news agency dpa, before air travel returned to normal in the German capital on Saturday morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.