டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி. 
உலகம்

நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைப்பேன்: உக்ரைன் அதிபர்

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் உதவினால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப் போவதாக ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் உதவினால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப் போவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்த உலகத்துக்கு, குறிப்பாக உக்ரைன் மக்களுக்கு போர் நிறுத்த வாய்ப்பை டிரம்ப் வழங்கினால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைப்போம். உக்ரைன் சார்பாக நாங்கள் அவரின் பெயரைப் பரிந்துரைப்போம் என்றார் அவர்.

உக்ரைன் போரில் டிரம்ப்பின் ஆதரவைப் பெற ஸெலென்ஸ்கி கடுமையாக பாடுபட்டுவருகிறார். தொடக்கத்தில் இதில் பின்னடைவைச் சந்தித்துவந்தாலும், அண்மைக் காலமாக இதில் சில முன்னேற்றங்களை ஸெலென்ஸ்கி எட்டியிருப்பதாகத் தெரிகிறது.

ரஷியாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, அந்த நாட்டை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்துவரக் கூடிய ஆயுதங்களில் அமெரிக்காவின் டாமஹாக் ஏவுகணைகள் மிக முக்கியமானவை என்று உக்ரைன் கருதுகிறது. இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க டிரம்ப்பும் சம்மதிப்பார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்தச் சூழலில், டிரம்ப்பின் நீண்ட கால கனவாகக் கூறப்படும் அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்க உக்ரைன் சார்பில் பரிந்துரைக்கப் போவதாக ஸெலென்ஸ்கி தற்போது அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!

கனகவதி... ருக்மணி வசந்த்!

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, பஹவல்பூர் நான்: விமானப் படை விழா மெனு

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

பார்மா, வங்கிப் பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT