முகப்பு
உலகம்

பாக். தாக்குதலில் 3 ஆப்கன் வீரர்கள் உள்பட 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

Updated On : 18 அக்டோபர், 2025 at 5:55 AM
பகிர்:

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் போர்ப் பதற்றம் இருந்துவரும் நிலையில், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் உர்குன் பகுதியில் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் மரியாதை செலுத்தும் விதமாக, இலங்கை - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

summary

Afganistan: Three Afghan cricketers killed in Pakistan airstrikes

முழு கட்டுரையைப் படிக்க →