நாம் இணையத்தில் ஏதேனும் தேடுவதற்கு பெரும் உதவியாக இருந்து வரும் விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா என்ற தளத்தை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த க்ரோக்கிபீடியாவை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் சிரமம் எதுவும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இது அனைவருக்கும் இலவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிறுவப்பட்டுள்ள 0.1 பதிப்பைவிட, 1.0 பதிப்பு 10 மடங்கு சிறப்பானதாக இருக்கும் என்று எலான் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய 0.1 பதிப்பு, விக்கிபீடியாவைவிட மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.
விக்கிபீடியாவில் மனிதர்கள்தான் பதிவுகளை எழுதுவதால், அது சார்புத்தன்மை உடையதாக இருப்பதாகவும், நடுநிலையான பதிவுகளைப் பெற க்ரோக்கிபீடியாவை உருவாக்கியிருப்பதாகவும் எலான் தெரிவித்துள்ளார். மேலும், க்ரோக்கிபீடியாவில் செய்யறிவால் உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் மட்டுமே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இந்தியா உள்பட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் அரசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.