நேபாளத்தில் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பியோடிச் சென்ற 67 கைதிகள் இந்திய - நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளனர்.
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.
இந்த நிலையில், நேபாளத்தில் நிகழும் போராட்டம் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தியாவுக்குள் நுழைய முயன்ற கைதிகள் பல்வேறு சோதனை சாவடிகளில் பிடிபட்ட 67 கைதிகள் பிடிபட்டுள்ளனர். அதில் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்ட பெண் கைதி அஞ்சிலா கட்டூன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை இணைக்கும் இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளிலிருந்து அனைத்து கைதிகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா-நேபாளம் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள எஸ்எஸ்பி பணியாளர்களிடம் சரியான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையைக் காட்டத் தவறியதால் இந்த கைதிகள் தடுத்துநிறுத்தப்பட்டனர். அனைத்து எல்லைகளிலும் கடுமையான கண்காணிப்பு தொடர்ந்துவருவதால் அதிகளவில் கைதிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.