பிரதமர், ராணுவத் தளபதியைத் தொடர்ந்து.. சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர்!
பாகிஸ்தான் அதிபர் 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளது குறித்து...
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், சமீபத்தில் 5 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, இன்று (செப்.12) முதல் செப்.21 ஆம் தேதி வரை சீனாவில் சுமார் 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
Advertisement
Advertisement
இந்தப் பயணத்தின் முதல் நாளான இன்று, அவர் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரத்துக்கு வருகை தந்துள்ளார். அந்நாட்டில் நடைபெறும் கோல்டன் பாண்டா சர்வதேச கலாசார மன்றத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிச்சுவான் மாகாணம், ஷாங்காய் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி ஆகியவற்றை அவர் பார்வையிடுகிறார். மேலும், இந்தப் பயணத்தில் அந்நாட்டின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன், சீனா - பாகிஸ்தான் உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கடந்த ஆகஸ்ட் 20 முதல் 22 ஆகிய இருநாள்கள் பாகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!
Pakistani President Asif Ali Zardari has arrived in China on a 10-day state visit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.