அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் மதுரோ!
புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தின.
இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன.
Advertisement
Advertisement
அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்திய நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பிடியில் அதிபர் மதுரோ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் விமானம் தரையிறங்கியது.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிபர் மதுரோவும், அவரது மனைவியையும் சிறைக்கு அழைத்து செல்லும் விடியோவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலாவின் நிர்வாகத் தொடர்ச்சிக்கும், விரிவான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதற்காக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால அதிபராக நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Venezuelan President Nicolas Maduro was imprisoned in a Brooklyn prison.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.