பாகிஸ்தானுக்காக நிதியுதவிகோரி மற்றைய நாடுகளுக்குச் சென்றதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி வணிகர்களிடம் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் பேசுகையில், “பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், இதில் கடன்களும் அடங்கும்.
கடன் வாங்குவதற்காகச் சென்று தலை குனிந்ததும் உங்களுக்குத் தெரியும்.
நானும் ராணுவத் தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதும் சென்று, பணத்துக்காக பிச்சை எடுப்பதற்கு வெட்கப்படுகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை. எங்கள் தலைகள் வெட்கத்தால் தலை குனிகின்றன.
நாட்டை நிலைப்படுத்த கடுமையான கொள்கைகளைப் பயன்படுத்திய பிறகு, பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் தீவிரமாக விவாதித்து வரும் நேரத்தில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.