மீனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***​

மீனம் (PISCES)

(இது ராசி மண்டலத்தின் கடைசி ராசி; இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இதன் சின்னம் L. இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது போன்றது. உடல் உறுப்புகளில் கால்களைக் குறிக்கிறது. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் பெறுகிறார். இந்த ராசியானது சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு ராசி. இங்கு சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். ஏனெனில், சூரியன் 6-ம் வீட்டு அதிபதி அல்லவா? இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

டிசம்பர் 2

இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.  மனதில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

டிசம்பர் 1 - 7

 

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் மேன்மையடையும். உடன்பிறந்தோர் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் கடமை உணர்வுடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் நல்லுறவுடன் இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள்.

பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

டிசம்பர் மாத பலன்கள்

 

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

ராசியில்  ராஹூ - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு (வ) -  களத்திர  ஸ்தானத்தில் கேது -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில் புதன் -  லாப  ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் அதிக நன்மைகளை அளிக்கும். மற்றவர்கள் செய்கைகளால்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். மனதிற்கு இதமான காரியங்கள் தொடங்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பூரட்டாதி:

இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரேவதி:

இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்களுக்கு இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள்.

தொழிலில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள். விவசாயிகளுக்குத் திருப்தியான சூழ்நிலை அமையும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார நிலையில் கணிசமான வளர்ச்சியை நிச்சயம் காணலாம். தொழில் சிறப்படையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரக்கூடிய நல்ல நேரம் இது.

அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வு மேலும் மேலும் சிறப்படைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். கட்சித் தலைமை உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கும். அதை சிரத்தையுடன் செய்தால் உங்களுக்கான அங்கீகாரம் கட்சியில் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைத்துறைபணிகள் சரிவர நடக்கும். பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம் இது. நலம் பெருக வாய்ப்புண்டு. தொழில் சிறக்கும். உங்களை மிகவும் உயர்வான நிலைக்குக் கொண்டு செல்ல இந்த காலகட்டம் உதவும். கௌரவம் சிறப்பாக அமையும். புகழ், பொருள், எல்லாம் பெருகக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.

பெணகளுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். தரும காரியங்களில் ஈடுபட்டு வந்தால் நலம் பெருகும். மனநலம், குடும்பநலம் அதிகமாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தேவையான பணம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொறியியல் துறையில் சாதனை புரியலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் புகழ் பெறுவார்கள். கணிதத்துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த ஆண்டு குடும் நலம், மனநலம் இரண்டுமே சீராக அமையும். தகுதிவாய்ந்த அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இடமுண்டு. கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்ப நலம் பெருகும். ஏழைகளுக்கு உதவுங்கள், தெய்வப்பணிகளில் ஈடுபடுங்கள். கணிதத்துறை வல்லுநர்கள், மருத்துவத்துறை மேலோர்கள், விவசாயத்துறை விற்பனர்கள், வியாபாரத் துறை சமர்த்தர்கள் அனைவரும் பாராட்டு பெற வாய்ப்பு பெறுவீர்கள். 

உத்திரட்டாதி:

இந்த ஆண்டு எல்லாம் விருத்தியாகும். தொழில் சிறப்படையும். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். பணவரவு சீராக அமையும். வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். மற்றவர்கள் பாராட்டத்தக்க வகையில் உங்கள் வேலை அமைந்திருக்கும். வீரியமுடன் காரியங்ளைச் செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்குகுழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரேவதி:

இந்த ஆண்டு வீடு, மனை வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் சரியாகி புது வீடு கட்டுவீர்கள். பணப்பிரச்சனைகள் தீர்ந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் திறமைகள் பல வழிகளிலும் வெளிப்படும். உங்கள் வேலை நுணுக்கத்தை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.  குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சந்தோஷமான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.