ரிஷபம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

ரிஷபம் (TAURUS)

இது ஒரு பெண் ராசி. பூமி ராசியின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு ஸ்திர ராசியும்கூட. இதற்கு அதிபதி சுக்கிரன். இது மாடு உருவம் கொண்ட ராசி. இதை B என்ற குறியீட்டால் குறிப்பார்கள். ஒரு மாடு இரண்டு கொம்களுடன் கூடிய உருவமாக

இருக்கும். இது ஒரு நாலு கால் ராசி. சந்திரன் இங்குதான் உச்சம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் கெடுதல் செய்யும் கிரகமாகவே கருதப்படுகிறார். ஆனால், ரிஷபத்துக்கு அவர் ஒன்பது, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாவதால், யோககாரகனாகக் கருதப்படுகிறார். இந்த ராசி, விவசாயத்தைக் குறிக்கும் ராசி. இதன் அதிபதியான சுக்கிரன், கலைகள், சினிமா துறை, கால்நடைகள் ஆகியவற்றுக்கு அதிபதி. உடல் உறுப்புகளில் இந்த ராசி கழுத்து, தொண்டை ஆகியவற்றைக் குறிக்கும்.​

டிசம்பர் 2

இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

டிசம்பர் 1 - 7

 

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். அதிரடியான விஷயங்களில் இறங்குவீர்கள். அரசு சலுகைகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியமும் மன வளமும் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத் துறையினர் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

பெண்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

டிசம்பர் மாத பலன்கள்

 

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் கேது -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  அஷ்டம  ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில் சனி -  லாப  ஸ்தானத்தில் ராஹூ  - அயன சயன போக  ஸ்தானத்தில் குரு (வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த கலக்கம் நீங்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமந்த சுமை மாறும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சண்டை சச்சரவுகள் அகலும். கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

தொழில் ஸ்தானத்தை செவ்வாய் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் இருந்த உடல் சோர்வு நீங்கும். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அகலும். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று அனைவரும் உங்களுக்கு ஆத்ரவுக்கரம் கொடுப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.

பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

கார்த்திகை:

இந்த மாதம் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். நக்ஷத்ரநாதன் சூரியன் சஞ்சாரத்தால் வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.

ரோகினி:

இந்த மாதம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை ராசியின் மீது படிவதால் உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

பரிகாரம்:  கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்களுக்கு இந்த் ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு   வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு.  பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்துவரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர்ச் செலவுக்கும் இடமுண்டு. 

வியாபாரிகளுக்கு அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.

அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது. 

பெண்கள் 'தானுண்டு, தன் வேலை உண்டு' என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச் சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம். 
மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெறத் தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும். 

கிருத்திகை 2, 3, 4 ம்பாதங்கள்: 

இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி-தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம்.  கற்றறிந்த மேலோருக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப்போக்கு வரத்தில் கண்ணியம் காப்பது அவசியம். 

ரோகினி:

இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்த கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன் விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:

இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல்-ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு. நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும். 

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.