நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் - 2 படத்தின் புரமோ படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகத் தகவல்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.
இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.
இதையும் படிக்க: பிரதர் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையில் ஜெயிலர் - 2 அறிவிப்பு விடியோவுக்கான செட் பணிகள் நடைபெற்று வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் பிறந்த நாளான்று ஜெயிலர் - 2 அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் நிறைவடையும் தனுஷின் ஓம் படப்பிடிப்பு?

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமம் இத்தனை கோடிகளா?

நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு!

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



